கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்னும் 14 நாட்களுக்கு இந்த ஊரடங்கு கடைப்பிடிக்க மக்களுக்கு மத்திய அரசு அறி வித்துள்ளது. உயிர்காக்க பிறப்பித்த ஊரடங்கு தற்போது மக்களின் உயிரை பறித்துகொண்டு வருகின்றது மிகுந்த வருத்ததிற்குரியது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் மாவட்ட எல்லைகள் அனைத்தும் முடப்பட்டது. இதனால் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். ஆனால் மத்திய, மாநில அரசு பேருந்து, ரயில் சேவை என அனைத்து போக்குவரத்துகளையும் நிறுத்திவைத்துவிட்டது. மக்கள் ஊருக்கு கடலத்தனயாய் புறப்படுவதை பார்த்து கைவிரல் விட்டு என்னும் அளவிற்கே பேருந்துகளை இயக்கியது.
இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். ஆனால் பேருந்து பற்றாக்குறையால் பல மக்கள் நடந்தே சென்றனர். இதனால் பலர் போகும் வழியிலே பல காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. மேலும் டெம்போ வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றி சென்றதால் டெம்போவும் விபத்துக்குள்ளாகியது. மக்களிடையே இது கொரோனாவை காட்டிலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோர விபத்துகளால் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப எந்த வாகன வசதிகளும் இல்லாமல் வெட்ட வெயிலில் வீட்டிற்கு திரும்பும் முதியோர் பரிதாபமாக இறப்பது மனதை பதற வைக்கின்றது. 62 வயதான நபர் ஒருவர் சூரத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். தேனியில் வாகனங்கள் செல்லும் சாலையை அடைத்ததால் 4 | பேர் காட்டு வழியில் சென்று காட்டு தீயில் பலியாகினர். உயிரை காக்க ஏற்படுத்திய ஊரடங்கு மக்களின் உயிரை வேட்டையாடி வருகின்றது.