நம் உரிமை

 


குற்றங்களை தவிர்க்கவும் மக்களை பாதுகாப்பதற்காகவும் தான் சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால், மக்கள் சட்டத்தினை பயன்படுத்துவது கிடையாது என்பது  வருத்தத்திற்குரிய  உண்மை. அதுமட்டுமின்றி  நமக்கு தேவையான சட்டத்தினை தெரிந்து  கொள்ள முயற்சிப்பது  கூட  இல்லை. இதனால் 100 சதவீதம் பாதிக்கப்படுவது  நாம்  மட்டுமே. ஆண்டுதோறும், மார்ச் 15ம் தேதி  உலக  நுகர்வோர்  தினமாக  அனுசரிக்கப்பட்டு  வருகின்றது.  இந்த  நாள் நுகர்வோர்க்கு  இருக்கும்  உரிமைகளை  பற்றி  வெளிகொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட து. ஒரு மனிதன் தனக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் முறை  நுகர்வு எனப்படும்.  சமானியன் முதல் குடியரசு தலைவர்  வரை  இந்த  உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் நுகர்வோர் தான். அனைவரும் நுகர்வோராய் இருக்க நம்மில் எத்தனை பேருக்கு நுகர்வோர் சட்டம் பற்றி தெரியும். நமது  அறியாமை தான்  நம்மை அழிக்கும் முதல் ஆயுதம்.   கலப்படம், சுரண்டல், ஏமாற்று  வேலைகள் முக்கியமாக அனைத்து குற்றங்களுக்கும் ஆணி வேராக  இருக்கும் ஊழல். இவை எல்லாம் நம்மாலே நமக்கு விதிக்கப்படுகின்றது.  நாம்  வாங்கும்  பொருட்கள் பாதுகாப்பானதா என்று அறிந்து கொள்ள உருவானது பாதுகாப்பு  உரிமை. ஒரு பொருளை  நியாயமான  விலையில் வாங்க ஏற்படுத்தப்பட்டது பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை. நமக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளும் அங்காடியில் சுகாதார குறைகள்  இருந்தால் அது  குறித்து  கேள்வி எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது பொருட்களை வாங்கியதற்கான திருப்தி பெறும் உரிமை. நாம் வாங்கும் பொருளின் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக மாற்றி விற்கப்பட்டால் புகார் அளிக்கும் உரிமை என பல உரிமைகள் நமக்கு உண்டு.  ஆனால் அவைகளை  அறிந்து கொண்டு செயல்படும் கடமையை  நாம் சரிவர செய்ய வேண்டி. இந்த 2020 நுகர்வோர்  தினத்தில் உறுதி  எடுப்போம்.