குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் இருப்பு போராட்டம்

கடலூர்,


 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் இருப்பு போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.


     


'குடியுரிமை எதிர்ப்பு கோரிக்கையை வலியுறுத்தி வருகி ன்ற 17.03.2020 காலை 10 மணிக்கு துவங்கி மறுநாள் 18.03.2020, காலை 10 மணி வரை தொடர் இருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகரஷ், தி.மு.க. நகர பொருளாளர், மணிமாறன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பால சுந்தரம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வெற்றிக்கு மார் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், மனித நேய மக்கள் கட்சி நகர செயலாள் பாஷா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா உறுப்பினர் R.A. புகழேந்தி, காளி தாஸ், மைனர் முருகேசன், பொன்னம் பலம், விடுதலை சிறுத்தைகள், கட்சியின் நகர செயலாளர், நாகராஜன் நன்றி கூறி ஆலோசனை கூட்டத்தை முடித்து வைத்தார்.