மருங்கூரில் பாழடைந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்

நெய்வேலி,


நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று வட்டாரத்திலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும் நீரழிவு நோயாளிகளும் மற்ற நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக பண்ருட்டி, கடலூர் அரசு பொது மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.


 


இதனால், மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆகையால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இந்த கட்டிடங்கள் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் முள் செடிகளும், புத ருமாக உள்ளது. இங்கு (விலங்குகள்) குரங்குகள் பாம்புகள் விஷ வண்டுகள் அதிகமாக இருப்பதால் நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகிறார்கள்.


விரைவில் இந்த பழமை வாய்ந்த கட்டிடத்தையும் முள் புதர்களையும் அகற்றி சுகாதாரத்துடன் கூடிய புதிய கட்டிடங்களை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்பதும், மருத்துவர்கள் குடியிருப்புகளில் தங்கி பணிகள் செய்திடவும் உயர் சிகிச்சைக்காக நோயா ளிகளுக்கு தேவையான புதிய கட்டிடங்கள் கட்டி நோயாளிகள் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் ஒருமித்த வேண்டுகோளாக இருக்கிறது.