தேனி,
தேனி மாவட்டத்தில் பொது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட காவல் துறையின் சார்பில் தேனி காவலன் என்ற செயலி முன்னேர செயல்பட்டு வருகிறது.
இச்செயலியின் மூலம் தற்போது, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நோய் பராவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் இருப்பின் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தல் போன்றவைகள் தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், காவல், மருத்துவம், வருவாய், உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் முக்கிய அலுவலர்களின் கைபேசி எண்களும் இச்செயலியில் இடம் பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்களுடன் இச்செயலியின் மூலம் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. இச்செயலியின் மூலம் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளித்தி டலாம்.
தேனி மாவட்டத்திற்குள் அத்தியாவசிய பொருட்களை சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) அவர்களை தொடர்பு கொண்டு அனுமதி அட்டை பெற்றுக் கொள்ள லாம். மாவட்டத்தில் (27.03.2020) வரை காவல்துறையினரால் 203 நபர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதன் காரணமாக 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவையில்லாத காரணங் களால் வெளியில் சுற்றிய 153 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. மேலும், அம்மா உணவ கங்கள், சமுதாய உணவு கூடங்களில் போதுமான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, ஆதரவற் றோர்கள் மற்றும் களப்ப ணியில் ஈடுபட்டு வருகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு மற்றும் குடிநீர் வழங்க ப்பட்டு வருகிறது. இந்த உணவ கங்கள் மூலம் மாவட்டத்தில் 10,644 நபர்க ளும், 9,864 நபர்களும் என மொத்தம் 20,508 நபர்கள் உணவு அருந்தி உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தெரிவித்துள்ளார்.