கோவை,
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலின்றி வருமுன் காக்கும் நடவடிக்கையாக கூட்டம் கூடாமல் தவிர்க்கப்படுகிறது. ஆகவே நாளை மணிக்கு நடைபெறவுள்ள கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.
முகாம் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளி யிடப்படும். எனவே பொது மக்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் நேரில் வர தேவையில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கப்படுகிறது.