சென்னை,
சென்னை சோழிங்கநல்லூரில் தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய பகுதி செயலாளர் எஸ். அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியை சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
கருத்தரங் கத்தில் பேராசிரியர் சுபவீரபாண்டியன் நடுவராக கலந்து கொள்ள வானம் வசப்படும் என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனியும், யாகம் வேர்விடும் என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன், தொண்டே வான் தொடும் தலைப்பில் புலவர் ராமலிங்கமும், மலையும் பொடிபடும் என்ற தலைப்பில் நந்தலாலாவும் கலந்துகொண்டு கருத்தரங்கில் பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் தா.பஷீர், எஸ் ஆர் உமாபதி, பகுதி அவைத்தலைவர் டி.ரவி, பகுதி துணை பெ.பன்னீர், பகுதி துணைச் செயலாளர் சாந்தி பசுபதி ஆகியோர் வரவேற்பில் வட்டச்செயலாளர் டி.ராஜேந்திரன், ஆர்.நாகராஜ், வீ.லட்சுமிபதி, வ.பாபு, ஜி.ரவி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் நா.குருசாமி, கே.ஏழுமலை, கே.தேவேந்திரன், வி.வி.குமரேசன், எஸ். தயாளன் கோ.முருகவேல் ஆர். சுரேஷ் பாபு, ஜி கே செந்தில் குமார், கோ. சத்யசீலன், தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா.தாயகம் கவி சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாலவாக்கம் சோமு, எஸ்.பொண்ணு வேல், வாசுகிபாண்டியன், எம்.எஸ்.கே. இப்ராஹிம், எஸ்.வி ரவிச்சந்திரன், வி. இ.மதியழகன், எம்.கே. ஏழுமலை, ஏ.கே. ஆனந்த், பா.அருண்குமார், ஆ. ஹரிகிருஷ்ணன், ரத்னா லோகேஷ், வி. எட்டியப்பன், மு.மனோகரன், த.விஜயபாலன், எம்.கிருஷ்ண மூர்த்தி , துரைகபிலன், பி.குணாளன், என்.சந்திரன், சைதை மா.அன்பரசன், எஸ்.பாஸ்கர், கீதா ஆனந்த், ஏ. வி. எம். பிரபாகர்ராஜா, எஸ்.தீபக், கோல்ட் பிரகாஷ், நா.மணிகண்டன், பரிமேள் அழகன், சைதை சாதிக், ஜெயராமன் மார்த்தாண்டன், கிரிஜா பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பகுதி துணைச் செயலாளர் வி.தனசேகரன் நன்றியுரை வழங்கினார்.