சீனா, வுகான் மாகாணத்தில் தலைத்தூக்கிய கொரானா தன்னுடைய கோரக் கரங்களால் அண்டை நாடுகளில் வேட்டையை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் கொரானாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,58,000-க்கும் மேல் நாளுக்கு நாள் இமாலய அளவில் உயர்ந்து கொண்டுள்ளது.
இதனை தடுப்பதற்கு வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன்படி, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா நேற்று தொடங்கியது.
இப்படி கடினமான சூழ்நிலையில் மக்கள் அதிகமாக தங்களை தற்காத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் பொது மக்கள் கொரானா முன் எச்சரிக்கையை தவிர்க்கிறார்கள். இந்தியாவில் நேற்றிய நிலவரப்படி 15 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் மக்களிடம் அலட்சியப் போக்கு அதிகமாக காணப்படுவது மிகுந்த வேதனைக்குறியது.
தியாகராய நகர் இன்னும் நெருக்கடியை சந்தித்து கொண்டுதான் உள்ளது. அரசு பேருந்துகளிலும் பயணிகளின் நெரிசல் குறையவில்லை. மாநகராட்சி தூய்மை பணியில் வேளை செய்பவர்கள் பாதுகாப்பு கவசம் அணியாது உழைக்கு நிலை கடுகளவிலும் மாறவில்லை. மது கூடங்களை மூடினாலும், மதுபான கடைகளில் குடி பிரியர்களின் அலைகளும் ஓயவில்லை. கொரானா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் கவலையாக பதிவிட்டுள்ளார்.
மக்களின் தன் நம்பிக்கை மிகவும் பாராட்டக்குறியது. ஆனால் நம்மை கொரானா தாக்காது என்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படமால் இருப்பது நம்மை நாமே மரணத்துக்கு ஒப்புவித்து கொள்ளும் நடக்கையாகும். ஊடகங்களில் கொரானாவை மிகைப்படுத்தி காட்டுகின்றனார் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சிக்கின்றனர். செய்திகளில் வெளிவரும் தகவல்களில் ஏற்படும் அச்சத்தை தவிர்த்து நம்மை காப்பதில் தீவிரத்தை காண்பிப்போம்.