பாலியல் வல்லுனர்வுக்கு எதிரான சட்டங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்திருந்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பெரிதளவில் குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதா என்பது கேள்வி குறிதான்.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி நிர்பயா கூட்டு பாலியல் செய்து கொல்லப்பட்டார். 8 வருடங்கள் பிறகு இப்போது தான் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து மூன்றாவது முறையாக நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கடந்த வருடம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொன்று எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை ஐதராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றார். ஆணையர் வி.சி.சஜநார் எடுத்த நடவடிக்கை இன்னும் மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது.
இனி குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் குறைந்ததாக எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் டிஷாவை கொன்றது போலவே இப்போது ரங்காரெட்டி மாவட்டம் தங்கட பள்ளியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு கீழ் ஆடை யின்றி ஒரு பெண்னை கொடூரமாக கொன்று வீசியிருக்கிறார்கள். பெண்ணின் சடலத்தை மீட்க சென்ற போலீசார் பெண்ணின் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பலியான பெண் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரானாவின் அழிவு ஒரு புறம் என்றால் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. சட்டங்கள் எவ்வளவு கடுமையானாலும் குற்றங்கள் குறைந்த பாடு இல்லை. பெண்களுக்கான திட்டங்கள் வானளவு உயர்ந்தாலும் இன்னும் பெண்ணின் நெடுநாள் அழுகையான பாலியல் வன்கொடுமை தீர்ந்தவாறு இல்லை. வருடத்தில் 366 நாட்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். எப்போது தீரும் இந்த அவல நிலை... அப்போது பிறக்கும் பெண்களின் தினம்......