சிவகங்கையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்


சிவகங்கை
    சிவகங்கையில் குடியுரிமை சட்டத்தினை திரும்பி பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இப்போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் ஏ.எஸ் முகமது தலைமை வகித்தார் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். இதில் குடியுரிமை சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஏராளமானோர் பேசினார்கள்.