கொல்கத்தா,
இதர நாடுகளின் மீது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் வரிசையில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளதாக மத்திய மந்திரி அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ராஜர்ஹட் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினருக்கான புதிய கட்டிடத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று பிற்பகல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா வன்முறைக்கு ஆந்திராவில் எதிராக பூஜ்ஜியம் சதவிகிதம் அளவுக்கு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துவதுடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் உயிர்ப்பான நடவடிக்கைகளிலும் மேம்பாடு அடைந்துள்ளது.
வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின் றது.
இதர நாடுகளின் மீது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் வரிசையில் இந்தியாவும் தற்போது இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே மிகச்சிறந்த படையாக நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு படையை உருவாக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
நமது வீரர்கள் ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் தங்களது குடும்பத்தாருடன் தங்கி இருக்கும் வகையிலான கொள்கை ஒன்றையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.