பரமக்குடி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நெருக்கம் மிகுந்த அய்யாத்துரை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், நகர் போலீஸ் நிலையத்திற்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
இம்மையத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளின் அவல நிலையை அன்றாடம் காணும் பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்து பதற்றத்துடன் வலியுறுத்தி கூறியுள்ளதாவது, பரமக்குடி அய்யாத்துரை தெருவில் உள்ள இம்மையத்தை சுற்றிலும் மரங்கள் தாழ்வாக அடர்ந்தும், மின் கம்பிகள் தாழ்வாகவும் செல்கின்றன.
இதனால் குழந்தைகள் உள்ளே இருக்கும் போது ஓணான், கருத்தாண்டி, அரிபூச்சிகள் விழுந்து குழந்தைகள், பணியாளர்கள் அலறல் சத்தம் போட்டு பதற்றம் அடைவதே வழக்கமாக உள்ளது. மையத்தை உரசியபடியே மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால் காற்று அடிக்கும் போது மின்கம்பிகள் உரசி மையத்தில் இருக்கும் அனைவருடைய நிலையுமே கேள்விக்குறியாக உள்ளது.
கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி அச்சம் அடைந்து வரும் வேளையில் விஷச் சந்துக்கள் திடீர் ... தீடீரென விழுவதால் குழந்தைகள் கண்டு மிரளுவதுடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகின்றன. அரிபூச்சிகள் உடம்பில் பட்டு தடுப்பு தடுப்பாக ஏற்பட்டு குழந்தைகள் கஷ்டப்படுகின்றன.
மேலும், இம்மையத்தில் பயிலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மதிய உணவிலும் விஷச் சந்துக்கள் விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை நீக்கி குழந்தைகள் சுபிட்சமாக வந்து செல்வது போன்று மரங்களை அப்புற ப்படுத்தியும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரையும் மாற்றியமைக்கவும் பலமுறை சம்மந்தப்பட்ட நகராட்சி துறையினர், மின்வாரியத்தினருக்கும் தகவல் தெரிவித்தும், எதையுமே கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் அரசு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு போர்க்கால நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட துறையினர்கள் மூலம் தற்போது குழந்தைகள் விடுமுறையில் இருக்கும் போது மரங்களை அகற்றியும், மின் கம்பிகள், டிரான்ஸ்பார்மரை மாற்றியமைத்து எங்களது வயிற்றில் பால்வார்க்க வேண்டுமென பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.