மிரட்டல் கடிதத்தின் காலம்

நாடு தொழில் நுட்ப வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறுகின்றது. எல்லாம் மடிக்கணிணி மற்றும் மாடலிங் என்று மாற்றதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இமாலய வளர்ச்சியை அடைந்து கொண்டு இருக்கின்றோம். தொலைபேசியின் பயன்பாட்டினால் கடிதம் எழுதும் முறை அழிந்துக் கொண்டு வருகிறது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். தபால் துறையிலும், தந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியாக அனைத்தும் இணைத்தளத்தால் மாற்றம் அடைந்த நிலையிலும், இந்நாள் வரை கடிதம் முலம் மிரட்டல் விடுக்கும் முறை மட்டும் மாறாமல் இருக்கின்றது. தினசரி நாளிதழில் கூட அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொருளாதாரம், குற்றம், உலகச்செய்திகள் என்று வகைப்பிரிக்கும் இடத்தில் ஒன்றாக மிரட்டல் கடிதங்களுக்கு என்று ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குறியது. சாமானியன் தொடங்கி அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள், அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் என்று அனைத்து தரப்பினரையும் குறி வைத்து அச்சுறுத்துகிறது மிரட்டல் கடிதங்கள். சமீபத்தில் பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் மர்ம நபர்களால் " பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்வோம், முடிந்தால் தடுத்து பாருங்கள் " என்று அதிரடியாக மிரட்டல் கடிதம் ஒன்று வெளியாகியது அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது. மேலும் 4 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள  234 எம்.எல்.ஏக்களையும் கடத்த  உள்ளதாக  சென்னை  வண்ணாரப்பேட்டை  போலீசுக்கு  மர்ம  மிரட்டல்  கடிதம்  வந்திருப்பது  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.  இந்த விவகாரம்  தொடர்பாக  போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இப்படி அனைவருக்கும் மர்ம நபர்களால் கொலை மிரட்டல் கடிதம் வருவது அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய காவல்துறை இதற்கென ஒரு தனி குழு அமைத்து, குற்றங்களை தடுப்பதற்கு வழி வகை செய்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.