கொடைக்கானலி கட்டுப்பாட்டில் சுற்றுலா தலங்கள் மூடல்

கொடைக்கானல்,


கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று கொரொனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 12 மைல் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பசுமைபள்ளத்தாக்கு, மற்றும் கொடைக்கானலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னவனூர் ஏரி வனத்துறை மூடியது.


மேலும் கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் கூறியதாவது, கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு மற்றும் பழனி வழியாக சுற்றுலா பயணிகள் இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதி இல்லை. மேலும் காலை 6 மணிக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளே செல்ல அனுமதி. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை. உள்ளூர் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மார்ச் மார்18 முதல் 31 வரை மட்டும் தற்போதைய அறிக்கையில் உள்ளது.