வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்காக 2020-2021ம் ஆண்டிற்கான பேருந்து சலுகை அடையாள அட்டை 01.04.2020 முதல் 31.03.2021 வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படும், என வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து சலுகை அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் 01.04.2020 முதல் 31.03.2021 வரை அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரம் தோறும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் அகிய மூன்று நாட்கள் 17.03.2020 முதல் மே மாதம் முடிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிமிட் தலைமை அலுவலகம் (ரங்காபுரம்) அலுவலகப் பணியாளர்கள் வருகை புரிந்து இலவச பேருந்து சலுகை அடையாள அட்டை வழங்கப்படுவதால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.